ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தினமும் ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக இருக்கும் நிலையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். உயிரிழப்புகளும் தொடர்ந்து வரும் இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி இன்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது. எனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் ஜாம் […]
நேற்று உலகம் முழுவதும் உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவரான நீடா அம்பானி அவர்கள் மார்பகப் புற்றுநோய் பிரச்சினைகளுக்கான ஒன் ஸ்டாப் ப்ரீஸ்ட் கிளினிக்கை நிறுவியுள்ளார். உலகம் முழுவதிலும் பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் பலரும் அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் நீடா அம்பானி அவர்கள் மார்பகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்க கூடிய […]
தாங்கள் எந்த விவசாய நிலத்தையும் வாங்க மாட்டோம் எனவும், ஒப்பந்த விவசாயத்தில் நுழைவதற்கான திட்டம் முற்றிலும் இல்லை எனவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறக்கூடிய விவசாயிகளின் போராட்டங்களால் செல்போன் கோபுரங்களும் தாககப்பட்டு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான1500 க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பஞ்சாப்பில் விவசாயிகளால் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா […]