புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வழக்கமாக நடைமுறையில் இருக்கும் 1-8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற நடைமுறையை கொண்டு வந்துள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்ததை தொடர்ந்து உடனடியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக […]
சென்னை : நேற்று மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. அதாவது கல்வி உரிமை சட்டம் (RTE) 2019 விதியில் மாற்றம் கொண்டு வந்து, 1-8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என கூறப்பட்டது. 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொது தேர்வு போல தேர்வை நடத்தி அதில் ஒருவேளை […]
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி இருந்தது. அதன்படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற முறை அமலில் உள்ளது. தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சகம், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி […]