பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி படிக்கட்டுகளில் சிரித்து கொண்டே ஏறி செல்லும் அழகான வீடியோவை முன்னாள் கூடைப்பந்து வீரர் பகிர்ந்துள்ளார். முன்னாள் கூடைப்பந்து வீரரான ரெக்ஸ் சாப்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது செரிப்ரல் பால்சி (பெருமூளை வாதம்) என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் முதல்முறையாக படிக்கட்டுகளில் ஏறுகிறார். படிக்கட்டுகளின் பிடிகளை பிடித்து கொண்டே அந்த சிறுமி சிரித்த முகத்துடன் ஏறும் அந்த வீடியோவை பலர் […]