சென்னை : தமிழகத்தில் குரூப் 4 பிரிவில் 8,932 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 15.8 லட்சம் பேர் எழுதி இருந்தனர். தற்பொழுது, குரூப் 4 தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டது. இன்று காலையில் தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களுக்குள் […]
டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப் – 2 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (டிஎன்பிஎஸ்ச), தொகுதி 2 மற்றும் 2A பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும் தேர்வு 25.2.2023 அன்று நடைபெற்றது. 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை 51,000-க்கும் மேற்பட்ட […]
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடுதல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற தனித் தேர்வுகளுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனி தேர்வர்கள் நாளை பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனை https://www.tnusrbonline.org/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் https://www.tnusrbonline.org/pdfs/candidates_eligible.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 8 மாநகராட்சியில் 7-ஐ கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்துள்ளது. அதாவது, சென்ற பிப்.14ம் தேதி, 109 முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 8 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேத்தலில் 71.39 சதவீத வாக்குப் பதிவானது என கூறப்பட்டது. இதில் மொத்தம் […]
10 மற்றும் +12 வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. கொரோனா பரவல் காரணமாக 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.ஆனால் 10வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10,11 மற்றும்12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கலுக்கு துணைத்தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் 10 மற்றும் +2 வகுப்பு துணைத்தேர்விக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பர் இறுதியில் நடத்தப்பட்ட இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுள் தவிர்த்து மற்ற ஆண்டு தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அக மற்றும் புற மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்நிலையில் திட்டமிட்ட படி அண்ணா பல்கலைக் கழகம் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் […]
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 10-வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு , அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். சமீபத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், அடுத்தமாத இறுதிக்குள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் முடிவுகள் வெளியாகும் என கூறினார். இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளியிடுவது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு […]
தேர்வு முடிவுகளை மாணவர்கள் இந்த இணைய பக்கத்தில் காணலாம். தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 9:30 மணியளவில் மாணவர்கள் இணையத்தில் காணலாம் என்றும், மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 89.41%, மாணவிகள் 94.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி (Distance Education ) மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் வெளியானது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி , மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெற்ற தொலைநிலைக்கல்வி (Distance Education ) படிக்கும் மாணவர்கள் எழுதிய செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் https://www.annauniv.edu/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மறு மதிப்பீடு செய்ய விரும்புவோர் அவரவர் பதிவு செய்து மையத்தில் வருகிற 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.