தமிழகத்தில் மொத்தம் 3,724 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட வாரியாக பட்டியலும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்த பட்டியலை ஆய்வு செய்து வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 36 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தமிழகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்தில் சென்னையில் தான் அதிக அளவில் கொரானா வைரஸ் பாதிப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் குறைந்து இருந்த நிலையில் மீண்டும் தற்பொழுது சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று வரை 10 இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா […]