டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி. டெல்லியில், 4 மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள உணவகங்கள், பார்கள் மற்றும் விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. இந்த அனுமதி பெற ஹோட்டல் உரிமையாளர்கள், அடிப்படை கட்டணத்தை செலுத்தி, உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மூன்று […]
ஓட்டல்களில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடகோரிய வழக்கு தள்ளுபடி. அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடகோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சுத்தமான, தரமான உணவு சமைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிசிடிவி பொருத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் நடராஜன் வழக்கு தொடுத்திருந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்தியது. இதில் 12 சதவீதத்திற்கு மேலான உணவகங்கள் போதுமான அளவு தரத்துடன் செயல்படவில்லை […]
உணவகங்கள் தனியாக சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவு. நாடு முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் தானாக சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தங்கும் விடுதிகள்,உணவகங்கள் சேவைக் கட்டணம் விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, எந்தவொரு தங்கும் விடுதியும் அல்லது உணவகங்களும் தானாக வாடிக்கையாளரின் பில்லில் சேவைக் கட்டணத்தை சேர்க்க கூடாது. வேறு எந்தப் பெயரிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக் […]
உணவகங்களில் சேவை கட்டணம் விதிப்பது சட்டவிரோதம் என்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, உணவகங்களில் பில்களுக்கு ‘சேவை கட்டணம்’ விதிக்க வேண்டாம். அப்படி விதித்தால் ‘சட்டவிரோதம்’ என்று நடவடிக்கை எடுக்கப்படும். விருந்தோம்பல் நிறுவனங்கள் மற்றவர்களுடன் இணைந்து கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் சட்ட கட்டமைப்பை விரைவில் உருவாக்குவோம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. நுகர்வோரின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை […]
சென்னை:உணவகங்களில் புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம் பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மளிகைக் கடைகள்,உணவகங்களில் மக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம் பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,உணவுக்கலப்படம் தொடர்பாக ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது,உணவில் கலப்படம் செய்தவர்கள் மீது […]
கொரோனா அதிகரிப்பின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு உணவகங்கள் மூடப்படும் என்று உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,மே 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி அலட்சியமாக வெளியே சுற்றுவதால்,24-ஆம் தேதி முதல் 31-ஆம் […]
இன்று முதல் உணவகங்களில் ஏசியை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அரசு தடை விதித்து, பார்சல்கள் மட்டுமே வாங்க அரசு அனுமதி வழங்கியது. பின்னர், அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கியது. ஆனால், உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதித்தது. இந்நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு […]
சென்னையில் உள்ள சரவண பவன், அஞ்சப்பர் , ஹாட் பிரட் பேக்கரி, கிராண்ட் ஸ்வீட்ஸ் ஆகிய நிறுவனத்தில் கடந்த 3 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அந்தந்த நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 32 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கடந்த 4 ஆண்டுகளாக வருவாயை மறைத்தும்,ரூபாய் 150 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல உணவு விடுதிகளான சரவண பவன், அஞ்சப்பர், ஹாட் பிரட்ஸ், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அதனடிப்படையில், இன்று காலை 8 மணி முதல் அந்த உணவு விடுதிகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனையில் […]