இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு…!! புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி கிடைக்கக்கூடும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….