டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பட்டியலின சமூகத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்ட்ட இடஒதுக்கீட்டு முறையில் உள்இடஒதுக்கீடாக அருந்ததியர்களுக்கு கூடுதலாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இதே போல பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டின் கீழ் மேலும் உள் இடஒதுக்கீடு வழங்கின. இந்த உள்இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன்னதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2005இல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அப்போது தீர்ப்பளித்து இருந்தது. அதில், உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதனை […]
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு ஜாதி வாரி கணக்கீடுப்பை நடத்தி முடித்தது. இந்த கணக்கெடுப்புக்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய முழு விவரத்தை நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன்படி, பீகாரில் உள்ள 13.07 கோடி மக்கள் தொகையில் 2.02 கோடி பேர் பொது பிரிவினர் என்றும், 3.54 கோடி பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், 4.70 கோடி பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை […]
மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து அரசு உத்தரவு. அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறை, சட்டத்துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 4% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை […]
இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவி வழக்கு தொடர்ந்து இருந்தார். நாட்டில் சாதி வாரியாக இடஒதுக்கீடு என்பது அமலில் இருந்து வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி பன்வர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இடஒதுக்கீடு முறை என்பது சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்பது போலவும் அதில் குறிப்பிட்டு இருந்த்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த […]
சத்தீஸ்கர் மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீட்டை 76% ஆக உயர்த்தும் 2 மசோதாக்களை சத்தீஸ்கர் விதான் சபை நிறைவேற்றியது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை 76% ஆக உயர்த்துவதற்கான இரண்டு மசோதாக்களை சத்தீஸ்கர் விதான் சபை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இதில், பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 76% ஆக உயர்த்தப்பட்டது. அரசு வேலைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை 76% ஆக உயர்த்தும் சட்டமசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, எஸ்டி பிரிவுக்கு 32%, பட்டியல் சாதிகளுக்கு […]
சூப்பர் ஸ்பெஷாலிட்டிபடிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி சேர்க்கை நடத்தலாம் என அனுமதி. தமிழகத்தில் நடப்பாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ஸ்பெஷாலிட்டிபடிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி சேர்க்கை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி 15 நாட்களில் இந்தாண்டு […]
தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அது போக மீதி விழுக்காடு பொது பிரிவு (இடஒதுக்கீடு இல்லாத பிரிவு) என ஒதுக்கப்பட்டு வருகிறது. அதனை உயர்த்தி 90-100 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். இடஒதுக்கீடு குறித்து பாமக தலைவருமான மாநிலங்களைவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இடஒதுக்கீட்டை 81 விழுக்காடு உயர்த்தியுள்ளார். அது வரவேற்க்கதாக்கது. அதில், […]
10% இட இஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் எதிர்ப்பு. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், தமிழக அரசு இதனை மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அணைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், 10% இட இஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என […]
பிரதமர், உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்து சென்றிருப்பது மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது என மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவால் தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் உள்ளது. தமிழக பாஜக அந்த இடத்தை சரியாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும். 10 % இட ஒதுக்கீட்டை திமுக எதுவுமே தெரியாமல் தன் பிராமண எதிர்ப்பை மட்டுமே வைத்து அரசியல் செய்கிறது. இந்த இடஒதுக்கீட்டை இந்திய […]
சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றம். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, சமூக நீதியை சீர்குலைக்க மாட்டோம் என்று 10% இட ஒதுக்கீடு வழங்கும் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை நாட […]
தமிழ்நாட்டில் ஓபிசி, எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என விசிக தலைவர் கோரிக்கை. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜக புறக்கணித்த நிலையில் மற்ற கட்சிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டில் ஓபிசி, எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். எஸ்சி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் 20% […]
சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருத்தது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு […]
10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருத்தது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை அனைத்து கட்சி கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு. மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை 30% ஆக உயர்த்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை 30% ஆக உயர்த்தக் கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் […]
பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்று முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ(எம்) கோரிக்கை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. இதற்கு, திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக, காங்கிரஸ் வரவேற்பு அளித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அத்திருத்தத்தை அப்போதே சிபிஎம் ஆதரித்தது என சிபிஎம் […]
EWS பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு பயணத்தில் காங்கிரசின் பங்கு உள்ளது என அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்பளித்ததது. இதில், 10% இடஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், பெரும்பாலான நீதிபதிகள் செல்லும் என்றதால் 10% இடஒதுக்கீடு உறுதியானது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாஜகவினர் […]
சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் சமூக நீதியாகும் என டிடிவி.தினகரன் கருத்து. தமிழக அரசு இதில் உறுதியாக நின்று, ஜெயலலிதா கொண்டுவந்த 69% இடஒதுக்கீட்டை காப்பாற்றிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் மேம்பாட்டிற்கு அரசு உதவிட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் […]
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10%இடஒதுக்கீடு உறுதி என்ற தீர்ப்பை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 4 விதமான தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்தனர். 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என 5 நீதிபதிகள் அமர்வில் […]
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதம். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது என்பது நியாயமற்றது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கான கொள்கைகைக்குள் இதை வகைப்படுத்த முடியாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பொருளாதார அளவுகோலின் கீழ் இடஒதுக்கீடு கொண்டு வருவது அரசியல் சாசன […]
அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்துக என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமல்படுத்தும் வகையில் திருத்தங்களை கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரசு பணியில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி 2016-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனடிப்படையில் 30% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீதம் போட்டியிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த […]