பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கார்கள், பைக்குகள், பேருந்துகள் சாலைகளில் மிதக்கின்றன. இதனால் பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு பெங்களூரு பாபுசபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடிக் கட்டடம், கனமழையால் இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 17 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தத்தால் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. புயல் சென்னை விட்டு விலகி சென்றதால் மழை சற்று குறைந்துள்ளது. மறுபக்கம் மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்று […]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி இந்த விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 11 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 12 மணி அளவில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதிக்கு செங்குத்தாக சுரங்கப்பாதை தோண்டப்பட்டது. உத்தரகண்ட் […]