வேலூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டையின் அருகே சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் விரைவு ரயிலில் 750 மூட்டை அரிசி கடத்தல் செய்யப்பட்டது. இதனை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை பரிமுதல் செய்து, அந்த 750 மூட்டை அரிசி நுகர்பொருள் வாணிய கிடங்கில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.