சென்னை: இன்று 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அவரைப்போல முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அந்த வகையில், த.வெ.க.தலைவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில், அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்ட, தனி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட […]
டெல்லி : இன்று 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா டெல்லியில், ராஜ்பதில் நடந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். வழக்கம்போல, இந்தமுறையும் குடியரசு விழா டெல்லி ராஜ்பாத் (கடமைப் பாதை) பகுதியில் தான் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய உடையான மகாத்மா காந்தி ஜாக்கெட் அணிந்து கொண்டு வருகை தந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், […]
சென்னை : இன்று தமிழ்நாட்டில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மேலே பறந்து மலர்கள் தூவின. ஆளுநர் கொடியேற்றி வைத்த இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள். கொடியேற்றி வைத்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் குடியரசு தின நிகழ்வுகள், வழக்கம்போல மரியாதை […]