குன்னுார் நகராட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, குடியரசு தினத்தில், துப்புரவு தொழிலாளர் தேசிய கொடியேற்றினார். இந்த நிகழ்வு குடியரசு தின வரலாற்றில் முதல்முறையாக அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சியில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், அந்த நகராட்சியின் மூத்த துப்புரவு தொழிலாளர் பார்வதி தேசிய கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியினை நகராட்சி கமிஷனர் பாலு தலைமை வகித்து பேசினார்.நகராட்சி மற்றும், ‘கிளீன் குன்னுார் அமைப்பு’ இணைந்து அவர்கள் சேகரித்த, 8.22 டன் பிளாஸ்டிக் பண்டல்கள் விற்பனை […]