69வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். பின்னர் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். சென்னையில் குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றினார். பின்பு நமது நாட்டினுடைய ராணுவப் படையினரின் மரியாதையை ஏற்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.