அக்டோபர் 4 முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4 முதல் மகாராஷ்டிரா முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார். மேலும், 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகள் நகர்ப்புறங்களில் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் […]
ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 27 முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் செப்டம்பர் 27 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திங்கள், செவ்வாய், புதன் கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், மாநிலத்தில் […]
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 50% மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு. கொரோனா தொற்றுநோய் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்ட நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 15ம் தேதி முதல் 50 சதவீத மாணவர்கள் வருகையுடன் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில உயர் கல்வி அமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் குறைந்தது 1,400 கல்லூரிகள் மற்றும் 56 பல்கலைக்கழகங்கள் 13.5 லட்சம் மாணவர்களைக் கொண்டுள்ளன என்றும் அதில் இரண்டு […]
ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு பாதிப்புகளை நாடு சந்தித்து வருகிறது. அதனால் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் விதிமுறைகளை கடைப்பிடித்து இன்று ஆந்திரமாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும். பள்ளிகளில் வகுப்பறைகளை அதிகரிக்கும் முறை அல்லது பகுதி நேரமாக பள்ளிகளில் வகுப்புகளை […]
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.மேலும், ஒரே இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், கோவில்கள், வணிக வளாகங்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் கல்வி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டது. பின்னர், படிப்படியாக கோவில்கள், வணிக வளாகங்கள் போன்றவை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, தற்போது கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கவுள்ளது. மொத்த மாணவ மாணவியரில் 50% மட்டுமே வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும், […]
இன்று முதல் “காசிரங்கா தேசிய பூங்கா” சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள ‘காசிரங்கா தேசிய பூங்கா’ கொரோனா காரணமாக ஏழு மாதங்கள் கழித்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. இதனை, அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் இந்த புகழ்பெற்ற பூங்காவை முறையாக மீண்டும் திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், மீண்டும் திறந்த பிறகு யானை சபாரிகள் கிடையாது. ஆனால், அவை நவம்பர் முதல் மீண்டும் தொடங்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா […]
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மெது மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிற நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மாணவர்கள், பெற்றோரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டது. தற்போது, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மெது மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிற நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மாணவர்கள், பெற்றோரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் […]
செப்.28-ஆம் தேதி கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு. கொரோனா எதிரொலியால் மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படும். வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி […]
கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், இன்று(செப்டெம்பர்,21) திறக்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ஒன்பது முதல், 12ம் வகுப்பு வரையில், விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு, இன்று முதல், பள்ளிகளை துவக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்புகள் வரை துவங்குகின்றன. இதில் முதற்கட்டமாக, […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் தர்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின், இன்று திறக்கப்படுகிறது. தாஜ்மஹால், கடந்த மார்ச், 17ம் தேதி மூடப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், புராதனச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் திறக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பின், […]
நாடு முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில், மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் பள்ளிப்பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது மத்திய, மாநில அரசுகள் கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]
செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கொரோனா மத்தியில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியாது என குஜராத் கல்வி துறை அமைச்சர் பூபேந்திர சிங் சூடாசாமா நேற்று தெரிவித்தார். காந்திநகரில் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு […]
பள்ளிகள் திறக்கப்படுவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இது குறித்து எந்த தகவலும் வரவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிப் பாளையத்தில் முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், வரும் அக்டோபர் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பள்ளிகள் […]
மகாராஷ்டிராவில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் கூடிய வழிகாட்டு நெறிமுறை வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் அளிப்பதற்கு வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. அதில், மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவருந்தும் சேவைகள் மற்றும் ஜிம்முகள் மீண்டும் தொடங்குவது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது. தற்போது, உணவகங்களில் பார்சல் மட்டுமே […]
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, ஆகஸ்ட் 10-ம் தேதி முதல்வர் அறிவிப்பார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் […]
கர்நாடகாவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு தற்போது வருகிற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பெருமளவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பஸ் உள்பட அனைத்து வகையான போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வணிக வளாகங்கள், திரையரங்குகள், […]
பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை. தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் முதல்வர் ஆலோசித்து வருகிறார். இதனிடையே தமிழகத்தில் மே 31 ஆம் தேதியுடன் […]