தோழர் ஈ.எம். எஸ்….. கம்யூனிஸ்ட்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்று, வரலாற்றை வளைப்பவர்களுக்கு ஒரு சேதி. அதைத் தெரிந்து கொள்ள, கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், புலாமந்தோள் என்ற ஊருக்கு சென்றால் போதும். அங்கே, வானுயர நிற்கும், ஒரு பள்ளி வாசல், கதை சொல்லும். அப்பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு, உங்களோடு பகிர்ந்து கொள்ள, ஒரு, வரலாற்று நிகழ்வு இருக்கிறது. ஈ.எம். எஸ். என்று, வாஞ்சையுடன்,இன்னும் நினைவு கூரப்படும், தோழர் ஈ.எம். எஸ். அவர்களின், முடிவெடுக்கும் திடமும், சிறுபான்மை மக்கள் மீது […]
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் மறைந்த ஜேம்ஸ்பாண்ட் முன்னால் நாயகன் ‘ரோஜர் மூர்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிப்ரவரி 27, 2008. – இன்று பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா நினைவு நாள் இவர் தொடாத தலைப்பே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறையிலும் தனது எழுத்தைக் கொண்டு சேர்த்தவர். ‘எந்த மரபையும் உடைக்கின்றபோது ஒரு புதுமையான இலக்கியம் தோன்றும்’ என்ற வகையில் அதுவரை இருந்த எழுத்து நடைகளை மாற்றி தனக்கென்ற வகையில் வேகமான சுவாரசியமான நடைக்குள் தமிழ் மொழியைக்கொண்டு வந்தவர். இவரது எழுத்து வரிகளில் கலந்திருக்கும் நகைச்சுவை அலாதியானனது: நாசூக்கானது. சொற்களின் அளவைக்குறைத்து கதையில் தன்னுடன் […]
அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்பட்டு வரும் ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) பிறந்த தினம் இன்று – பிப்ரவரி 22,1732. அமெரிக்க சுதந்திரப் போரில் அவர் தலைமைப் பொறுப்பு ஏற்ற 1775ஆம் ஆண்டு முதல், சுதந்திர அமெரிக்காவின் அதிபராக 2 முறை பதவி வகித்த காலகட்டம் வரை இவரது சாதனைகள் மகத்தானவை. விடுதலைப் போர் முடிந்த பிறகு, இவர் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் குழுவுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர். அரசியலமைப்புச் சட்டத்தை […]
இன்று பிப்ரவரி 22ம் நாள் மகாத்மா காந்தியின் துணைவியார் கஸ்துரி பாய் காந்தியின் நினைவு தினம். கஸ்துரி பாய் தன் கணவர் ஏற்ற தேசிய போராட்டப் பாதையில் அவருக்கு துணையாக தனது வாழ்நாள் முழுவதும் பின்தொடர்ந்தவர்.. காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. சிறு வயதிலேயே […]
இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள் -ஜனவரி 11 – சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் நடத்திய தடியடியில் திருப்பூர் குமரன் படுகாயம் அடைந்து 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த குமரன் நாட்டின் விடுதலைக்காக நடந்த சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றார். 1932ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்ட மறுப்புப் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 11ஆம் தேதி திருப்பூரில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கையில் […]
இன்று “ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ” முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள் -ஜனவரி 11, 1966. இவர் இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு தீவிர விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் பதவியேற்று அடுத்த ஆண்டே இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் […]