கும்பகோணம் ராமகிருஷ்ணன் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் சீமானும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் மதரீதியிலான பதற்றங்களை உருவாக்குகின்ற எச்செயலையும் அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.