தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த அக்.1 முதல் டிசம்பர் 4 வரையான வடகிழக்கு பருவமழை காலத்தில் […]
ஜோத்பூர் சிலிண்டர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் அறிவிப்பு. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் அருகே உள்ள புங்ராவில் திருமண நிகழ்வு நடைபெற்ற போது சிலிண்டர் வெடித்து பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 […]
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல். மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டில் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அண்மையில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், […]
சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள மக்களுக்கு ₹1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிலும், குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கபாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. கனமழையை தொடர்ந்து அதிக பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின், சீர்காழி மற்றும் […]
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு, மேலும் கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் […]
டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரிப்பு. டெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள முண்ட்கா ரயில் நிலையம் அருகில் உள்ள 4 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டன. இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 40க்கும் […]
சென்னையில் வீடுகளை இடிப்பதற்கு இடித்ததற்கு எதிராக தீக்குளித்த இறந்தவர குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு. சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்குவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிபடுவதை எதிர்த்து கண்ணையன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண தொகையை முதல்வர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் […]
இலங்கை மக்களுக்கு நிவாரணத்திற்காக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்டும் என முக ஸ்டாலின் அறிவிப்பு. இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக நிதி உதவி அறிவித்துள்ளது என தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் […]
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால் அது சாத்தியமற்றது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 24 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் 183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை […]
துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அதற்கு, இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதியழகன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். […]
பணியின்போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை ரஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பணியின்போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செவிலியர் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவருடைய குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுளேன் என்று […]
நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் நிவாரணமாக ரூ.2000 வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிவாரண உதவி தொகை உட்பட […]
உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு. திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் சிறுகமணி மேற்கு கிராமத்திலுள்ள சேதுரப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரியில், விமானம் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள், தனிமைப்படுத்தப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கண்காணிக்கும் பணியிலிடப்பட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் என்பவர் கடந்த 13 ஆம் தேதி அன்று தன்னுடைய பணியை முடித்து வீடு திரும்பும்போது மதுரை – சென்னை […]
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்டம் அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அறிவித்து வருகிறார். பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே 5 வது முறையாக உரையாற்றினார். அப்போது, நாடு முழுவதும் 4வது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் […]
மூன்று லட்சம் புகைப்படக் கலைஞர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு 3 கட்டமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும், தொழில்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசு நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கியது, ஆனால் […]
விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் வெண்டிலேட்டர் பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். […]