மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. “மிக்ஜாம்” புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மீட்புப் […]
Michaung Cyclone : மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு. அதன்படி, மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு தனது தொகுப்பின் கீழ் மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்கும் மாநில பேரிடர் மீட்பு பணிகளுக்கான SDRF நிதியின் கீழ் 2வது தவணையாக ரூ.493.60 ஆந்திரா மாநிலத்திற்கும், ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்க […]
கடலூரில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த இரண்டு சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு. கடலூர் மாவட்டம் வடக்கு ராமபுரம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடம் ஒன்று இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. கட்டிடத்தின் அருகில் சிறுவர்கள் அமர்ந்திருந்த போது விபத்து உள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ […]
கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாக்குமரி மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். யாஸ் புயல் எதிரொலியால்,கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்தது.அதனால்,கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனையடுத்து,குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக,மொத்தம் 238 கூரை வீடுகள் மற்றும் 35 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல்,373 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வேளாண், தோட்டக்கலை பயிர்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது என முதல் நிலை அறிக்கை […]
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா,மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடி நிவராணம் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கடந்த 26 ஆம் தேதியன்று ஒடிசாவின் பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்து,மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசை குறிப்பாக ஜார்கண்ட் நோக்கி நகர்ந்தது. இருப்பினும்,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க […]
நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொள்வோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீட் அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. நிவாரணம் வழங்கும் அரசு, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசு, அரசியல் கட்சிகள் நிதி, வேலை தருவதாக கூறுவது தற்கொலையை […]
மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் ஏற்கனவே ரூ.10 லட்சம் அறிவித்திருந்த நிலையில், தற்போது ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியின்போது தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், உள்ளாட்சித்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் இறக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று […]