போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை துவக்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பத்திரப்பதிவு துறையில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போலி பத்திரப்பதிவால் சென்னை அமைந்தகரையில் உள்ள நிலத்தை இழந்த நடிகை வாணிஸ்ரீக்கு நிலம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை புதிய சட்டம் […]
அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கு ஆன்லைன் தேர்வு ஜூலை 24-ஆம் தேதி முதல் நடைபெறும் என இந்திய விமானப்படை அறிவிப்பு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக […]
கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய ஆட்சேபனை இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம் என கடந்த 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலைய கதிர்வீச்சிக்கு உட்பட்ட 14 கிராமங்கள், பேரூராட்சிகளில் பத்திர பதிவுக்கு ஆட்சேபனையில்லை என தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அரசிதழில் குறிப்பிட்டுள்ள சர்வே எண் இடங்களை பத்திரப் பதிவு மேற்கொள்வதற்கு ஆட்சேபனை இல்லை என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இருந்து 2 புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இருந்து புதிதாக இரண்டு கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் ராஜ்ய கட்சி என இரண்டு புதிய காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்சிகளின் பதிவு குறித்து ஜனவரி 7-ஆம் தேதிக்குள் எதாவது ஆட்சேபணைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, […]
திருமணம் பதிவு செய்தல் சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று இறுதி நாளான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது, திருமணம் பதிவு செய்தல் சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம் என்றும் திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் தான் […]
மகளிர் விடுதிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம், ஜனவரி 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில், பெண்கள் விடுதியில் கேமரா வைத்து, அங்கு தங்கி இருந்த பெண்களை தவறாக வீடியோ எடுத்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த விடுதி, உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, நகரில் இயங்கிவரும் பெண்கள் விடுதிகளை, முறையாக பதிவு செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அவகாசம் […]
இனி புதிதாக திருமணம் ஆகும் புதுமண தம்பதிகள் திருமண பதிவு அலுவலகத்தில் பதிந்து திருமண சான்று பெற மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்றிதழை கட்டாயமாக்க கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.