வட்டார கல்வி அலுவலகத்திற்குள் புகுந்த சாரை பாம்பால் அலுவலர்கள் அலறியடித்து ஓட்டம். திருவண்ணாமலையில், வந்தவாசியில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிற நிலையில், அங்கு அலுவலர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், பகல் 12 மணியளவில், அலுவலகத்திற்குள், 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த அலுவலர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், சிறிது நேர […]