கடந்தாண்டு கொரோனவால் மார்ச் முதல் ஜூலை வரை முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட்டது. அதற்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கொரோனாவும், ஊரடங்கும்: உலகளவில் கொரோனா பரவத்தொடங்கிய நிலையில், பல நாடுகளில் யாரும் எதிர்பார்த்திடாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு முற்றிலுமாக முடங்கியது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் விட்டுவைக்கவில்லை, இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, பேருந்து, ரயில் சேவைகள் […]
கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்ந்து பின்னர் விலகியவர்களுக்கு கட்டணத்தை திருப்பித்தர பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்ந்து பின்னர் விலகியவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிடப்பட்டுள்ளது. விலகிய மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தர கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பொழுது விமானம் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட விமான பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் பணத்தை திருப்பித்தர தற்பொழுது முன்வந்துள்ளது. கடந்த ஒரு வருட காலங்களாகவே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோன தொற்று ஏற்பட்டதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது. அதுபோல விமான சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் விமானத்திற்கு […]
வேலூர் மாவட்டத்தில் சோளிங்கரில் உள்ள ஒரு திரையரங்கில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது.இதை தொடர்ந்து ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் திடீரென அந்தத் திரையரங்கில் ஆய்வு செய்தார்.அதில் அதிக கட்டணம் வசூல் செய்வது தெரியவந்தது. நிர்ணயிக்கப்பட்ட ரூ.80 கட்டணத்தை விட அதிகமாக முதல் வகுப்பிற்கு 150 ரூபாயும் , பால்க்கனி 200 ரூபாயும் வசூலிக்கப்பட்டு தெரியவந்தது. இதையடுத்து அதிகமாக வசூல் செய்த 33,830 ரூபாயை திரைப்படம் பார்க்க வந்த 589 பேருக்கு திருப்பி கொடுக்க உத்தரவு […]