பாலிவுட் சினிமாவில் படங்களை தாண்டி பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரீனா அகர்வால். இவர் சமீபத்தில் Kya Haal Mister Panchal என்ற சீரியலுக்காக நாய் வைத்து படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறார். திடீரென்று அந்த நாய் அவரின் முகத்தை மோசமாக கடித்துள்ளது. இதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரீனாவிற்கு முகத்தில் சில தையல்கள் போடப்பட்டுள்ளதாம். மருத்துவர்கள் அவரை ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்க கூறியுள்ளனர்.