ஆந்திராவில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற 28 தமிழர்கள் கைது!
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ராயசோட்டி புறநகர் பகுதியில், செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக ஆந்திர எஸ்.பி. பாபுஜிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உப்பரபள்ளி பகுதியில் உள்ள கிருஷ்ணாரெட்டி ஏரி அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செம்மரங்களை வெட்டி கடத்த தயார் நிலையில் வைத்திருந்த கும்பலை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் கற்கள் மற்றும் கோடாரிகளை போலீசார் மீது தாக்குதல் வீசிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்த 28 பேரை ஆந்திரப் போலீஸார் […]