வாட்ஸ்-அப்பை அப்டேட் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.அவ்வாறு செய்யவில்லை எனில்,வாட்ஸ்-அப்பில் உள்ள வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது,வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறையின் அடிப்படையில் வாட்ஸ்-அப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.மேலும்,இந்த […]
வங்கி அதிகாரிகள் தேர்வில் இட ஒதுக்கீடு குறைத்திருப்பதால் வாங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். வங்கி அதிகாரிகள் தேர்வில் இட ஒதுக்கீடு குறைத்திருப்பதால் வாங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடும், அதற்கான இடங்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், பிற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான […]
பி.எப்.வட்டி விகிதம் குறைப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.65% லிருந்து 8.50%ஆக குறைத்தது மத்திய அரசு. தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு, எவ்வளவு வட்டி அளிப்பது என்பதை, ஒவ்வொரு ஆண்டும், சி.பி.டி., எனப்படும், மத்திய அறங்காவலர் வாரியம் நிர்ணயம் செய்யும். கடந்த நிதியாண்டில், வட்டி விகிதம், 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தாண்டுக்கான வட்டி விகிதத்தை 8.65% லிருந்து 8.50%ஆக குறைத்தது மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தாண்டுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும்படி, அறங்காவலர் வாரிய […]
ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு அமலாகிறது. டெல்லியில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 23 பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி குறைக்கப்பட்டது. அதனடிப்படையில், திரைப்பட கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளது.100 ரூபாய்க்கு உட்பட்ட டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதமும் 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறைப்பு இன்று […]
மானிய சமையல் காஸ் சிலிண்டரின் விலையில் 5 ரூபாய் 91 காசுகளை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. தற்போது, மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு 5 ரூபாய் 91 காசுகள் குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அறிவித்துள்ளது. இது தவிர மானியம் இல்லாத சிலிண்டரின் விலையில் 120 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. […]
கேஸ் சிலிண்டர் விலை திடீர் குறைப்பு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ₨46.50 குறைந்தது. அண்மை காலமாக தொடர்ந்து அதிகரித்து வந்த சிலிண்டர் விலை தற்போது திடீர் என்று குறைக்கப்பட்டுள்ளது.எனவே தற்போது ஒரு சிலிண்டரின் விலை ₨746-க்கு விற்பனை செய்யபடுகிறது. இதில் மானியம் ₨229.50 ஆகும்.