அரசு விழாக்களில் நினைவு பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசு. அரசு உயர் அதிகாரிகள் உயர் வகுப்பு விமான பயணத்துக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு செலவில் வெளிநாடு பயணத்திற்கும் தடை எனவும் கூறியுள்ளது. தமிழக அரசு அலுவலங்கங்களுக்கான செலவுகளில் 20 சதவிகிதம் குறைக்க உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று அரசு விழாக்களில் நினைவு பரிசுகள், சால்வைகள், பூங்கொத்துகள் போன்றவைகள் வழங்குவதற்கான செலவுகள் அறவே தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. […]