செங்கக்கடல் தாக்குதலுக்கு பிறகு ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இரு நாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. ஏனென்றால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் […]
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு, செங்கடல் மற்றும் அரபிக்கடலில் சர்வதேச கப்பல் வழித்தடங்களில் தொடர்ந்து கப்பல் தாக்கப்பட்டு வருகின்றன. நேற்று செங்கடலில் வணிகக்கப்பலின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலை அமெரிக்க கடற்படை முறியடித்து அதன் மூன்று கப்பல்களை மூழ்கடித்து 10 பேரை கொன்றது. அமெரிக்கா கடற்படை இதுகுறித்து கூறுகையில், சிங்கப்பூர் கொடியுடன் வந்த வணிகக் கப்பலை ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்கியதாக அமெரிக்க ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும், அமெரிக்கா உடனடியாக தனது போர்க்கப்பல்களை […]
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மேலும் ஒரு கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த எம்.வி கெம் புளூட்டோ கப்பல் மீது நேற்று அரபிக்கடலில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன் தாக்குதல் பரபரப்பு அடங்குவதற்குள் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மற்றொரு கப்பல் மீது செங்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செங்கடல் வழியாக வந்த காபான் நாட்டைச் சேர்ந்த சாய்பாபா என்ற கப்பல் இந்திய தேசிய கொடியுடன் […]