டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், 52 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை தங்களது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் ஆவார்கள். இவர்கள் இருவரும், துபாயில் இருந்து டெல்லி வந்த போது பிடிபட்டனர். இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், 1.14 கிலோ எடையுள்ள தங்கத்தை மலக்குடலில் பேஸ்ட் வடிவத்தில் மறைத்து வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மறைத்து வைத்திருந்த தங்கத்தின் மதிப்பு […]