தற்போதுள்ள ஹீரோக்களில் பிஸியாக நடித்து வரும் ஹீரோக்களுள் விஜய் சேதுபதியும் ஒருவர். அவரது அடுத்த படமான ’96’ படத்தில் விஜய் சேதுபதி வித்யாசமான 3 கெட்டப் நடிக்கிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சி.பிரேம் இயக்கியுள்ளார். இவர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாக பணியாற்றியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது. படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14 ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.