மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்துக்கும், சிந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சிந்தியா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார். பின்னர் இதையடுத்து நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டா தலைமையில் ஜோதிர்ராதித்ய சிந்தியா பா.ஜ.கவில் இணைந்தார். கட்சியில் இணைந்த கையோடு சிந்தியாவுக்கு மாநிலங்களவை சீட்டையும் பாஜக ஒதுக்கியுள்ளது. இதனிடையே 18 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து திடீரென பாஜகவில் இணைந்த சிந்தியா, […]