ஆந்திராவில் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை . சில இடங்களில் ஊரடங்கில் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகளையும், கல்லூரிகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]