டெல்லி : ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராக வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ராவை நியமிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான மல்ஹோத்ரா நிதி, வரிவிதிப்பு, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 33 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை வைத்திருக்கிறார். இந்த சூழலில், அவருக்கு ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராகும் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே, மத்திய வங்கியின் 26வது ஆளுநராக பதவியேற்கவுள்ளார். எனவே, டிசம்பர் […]
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்போலோ மருத்துவமனை சற்று நேரத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, டிசம்பர் 10ஆம் தேதியுடன் அவரது ஆளுநர் பதவிக்காலம் நிறைவுபெறுவது குறிப்பிடத்தக்கது.
Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது, குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5%-ஆகவே தொடரும். நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் […]
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் 6-வது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது […]
மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்திகாந்த் தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5வது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும். நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தில் […]
ரெப்போ (4%) மற்றும் ரிவர்ஸ்-ரெப்போ (3.35%) வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கான குறுகியக் கால கடன் (ரெப்போ) வட்டி விகிதத்தில் (4%) மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,நிதிக் கொள்கைகளை வெளியிட்டு ஆர்பிஐ ஆளுநர் கூறியதாவது: “பணவியல் கொள்கைக் குழு (MPC) கொள்கை ரெப்போ விகிதத்தை 4% ஆக வைத்திருக்க ஒருமனதாக வாக்களித்தது.இதனால்,அதில் எந்தவித மாற்றமும் இல்லை.மேலும்,MSF […]
கொரோனா வைரஸின் 2-வது அலை பரவல், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்கப்படுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா தொற்று அதிகமாகி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவல், கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. […]
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால், 7,909,959 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும், இந்த வைரஸ் தாக்கி வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவர் […]