கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே போகும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தனிமைப் படுத்துதல் முகாமில் அம்மா அறக்கட்டளை மூலம் மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை,கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள அரசு டாஸ்மார்க் குடோனில் பணியாற்றும் 500 கூலி தொழிலாளிகளுக்கு காய்கறி மற்றும் அரிசி தொகுப்பை அவர் வழங்கியுள்ளார்.