மதுரை : உசிலம்பட்டி அருகே அத்திப்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிகழ்வு முடிந்து திருமங்கலம் நோக்கி திரும்பியுள்ளார். உடன் அதிமுக கட்சி பிரமுகர்களும் வந்துள்ளனர். அப்போது, மங்கல்ரேவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, ஒரு கும்பல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காரை வழிமறித்துள்ளனர். அவர்கள், அமமுக கட்சியினர் என்பதும், அமமுக தலைவர் டி.டி.வி.தினகரனை ஆர்.பி.உதயகுமார் தவறாக பேசியதால் அவரது காரை வழிமறித்ததாகவும் கூறப்படுகிறது. […]
சென்னை : நேற்று நடைபெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு பற்றிய செய்திதான் தற்போது வரை தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. திமுகவினர் பற்றி நேரடியாக விமர்சனம் செய்ததால், அங்கிருந்து எதிர்ப்பு கருத்துக்களும், மற்ற கட்சியில் இருந்து ஆதரவு எதிர்ப்பு பலவகையான கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது. நேற்று பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் பேசி விமர்சனம் செய்துவிட்டு அதிமுக பற்றி எந்த விமர்சனமும் முன்வைக்காமல் இருந்துள்ளார். அதுபற்றி கூறிய […]
சென்னை : அதிமுக மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் இடையேயான வார்த்தை மோதல்கள் தற்போது அதிகரித்துள்ளன. இரு கட்சித் தலைவர்களுமே “நாங்க இல்லாமல் அந்த கட்சி இல்லை” என கூறி வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரையில் அதிமுக – பாஜக ஒரே கூட்டணியில் செயல்பட்டு வந்தன. அதன் பிறகு, பல்வேறு அரசியல் சூழ்நிலை காரணமாக பாஜக – அதிமுக கூட்டணி முறிந்தது. பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளும், அதிமுக தலைவர்கள் பற்றி […]
மதுரை: மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நடைமுறையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று தமிழக அரசும் ஓர் செய்தி குறிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், கப்பலூர் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து தமிழக […]
அதிமுக: நேற்று முன்தினம் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பெரும்பாலும், திமுக வெல்லும் என்றும் அடுத்த இடத்தில் அதிமுக பாஜக இருக்கும் என கூறப்பட்டது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேர்தல் பிரச்சரத்தில் இலக்கு நிர்ணயித்து மக்களை சந்தித்து அவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றோம். இப்போது வந்துள்ள கருத்து கணிப்புகள் பார்த்து வயிறு எரிகிறது. 2 நாளாக சாப்பிடவில்லை. மன உளைச்சல் ஏற்படுகிறது என […]
மதுரை: ஜெயலலிதாவை பற்றி கூறி பாஜகவினர் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள். முடிந்தால் அவர்கள் தலைவர்களின் பெருமைகளை கூறி மக்களிடம் ஆதரவு பெறுங்கள் – ஆர்.பி.உதயகுமார். சில தினங்கள் முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் பற்றி தனியார் செய்தி சேனல் நேர்காணலில் , ஜெயலலிதா ஓர் இந்துத்துவா தலைவர் என்றும், அவர் தான் இந்து என்பதை வெளிப்படியாக மக்களிடத்தில் வெளிப்படுத்தினார் என்றும் கூறிய கருத்துக்கள் அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டு […]
RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக அப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிவு நீரால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக […]
RB Udhayakumar : திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்ததாக முதலமைச்சர் முன்வைத்த விமர்சனத்துக்கு ஆர்பி உதயகுமார் மறுப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த சூழலில் திமுக தேர்தலை அறிக்கையை அதிமுக காப்பி பிரிண்ட் அடித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். முதலமைச்சர் கூறியதாவது, மத்திய பாஜகவுடன் கூட்டணியாக இருந்து சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யாமல் துரோகங்களை […]
அதிமுக தேர்தல் தயாரிப்பு குழு நாளை மக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளது என்று அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், அதிமுகவில் ஒருபக்கம் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் தேர்தல் தயாரிப்பு குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், […]
கருணாநிதியின் கட்சி காலாவதியான கட்சி என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ‘இந்த இயக்கத்தை எத்தனையோ பேர் வீர வசனம் பேசி அழிப்போம் என்று கூறினார்கள் ஆனால் அவர்கள்தான் காணாமல் போய் உள்ளனர். மதுரையில் அமைச்சராகவும், முன்னாள் முதலமைச்சரின் மகனான அழகிரியும் இதே மதுரையில் அதிமுகவை அழிப்போம் என்று கூறினார். ஆனால் தற்போது அவரைத் தேடும் நிலை தான் உள்ளது’ என்று கூறியுள்ளார். ‘நீதிமன்ற உத்தரவின் […]
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை ,மழை, வெள்ளத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர் மழைக்கால கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது அனைத்து துறைகளையும் தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை.வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே முதலமைச்சர் 4 ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.இந்நிலையில் அரசு தூங்குவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதற்கு […]
வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவேசமாக கூறியதாவது…! ஓரிரு நாட்களில் ஆட்சியை கலைத்து விடுவோம் என்று வீரவசனம் பேசியவர்களுக்கு நடுவே, 17 மாதங்கள் முடிந்து 18வது மாதத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் ஆட்சியை மன்னாதி மன்னனாலும் அசைக்க முடியாது என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவேசமாக தெரிவித்துள்ளார்.மேலும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று கூறினார். DINASUVADU