15 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, மாலை 6 மணிக்கு தொடங்குகிறது என்று ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின் ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், பயணிகள் ரயில் படிப்படியாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 17 தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் பேருந்து, விமான மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே ரயில்வேதுறை வெளியிட்ட அறிவிப்பில்,மே 12 முதல் பயணிகள் சிறப்பு ரயில் இயங்கும் என அறிவித்தது. முதற்கட்டமாக வரும் 12 ஆம் தேதி முதல் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் […]
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், மால்கள், திரையரங்குகள் மட்டுமின்றி நாட்டின் எல்லைகளும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், பெரிய நகரங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்திய ரயில்வே நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நோய் தொற்றின் காரணமாக அனைத்து ரயில்களையும் ரத்து செய்தது. இந்நிலையில் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், 2014-ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றது முதல், ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, ரயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்குத் தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை […]