மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கை ஓன்று , இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாஜகவின் வெறுப்பு பேச்சுகள் இடம்பெறுவதை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று செய்தி வெளியிட்டது.இதனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டு ,இது ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக தெரிவித்தனர்.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது […]
அஞ்சல் துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள். இந்த நிலையில் அஞ்சல் துறை தேர்வு ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்றது.ஆனால் மாநிலங்களவையில் அஞ்சல் துறை தேர்வு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக – திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர் .அமளி காரணமாக இன்று அவை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் […]
123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மக்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் மே 31 வரை 123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 7 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 492 ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.