தலித்துகள் கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமியத்திற்கும் மாறினால் தேர்தலில் தலித்துகளுக்கான சலுகைகளை பெறமுடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். கிறிஸ்தவத்திற்கும் அல்லது இஸ்லாமியத்திற்கும் தலித்து ஒருவர் மாறினால் அவர் மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் பட்டியல் சாதியினருக்கான ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், இடஒதுக்கீட்டின் வேறு எந்த சலுகைகளும் அவர்களால் பெற முடியாது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இருப்பினும், இந்து, சீக்கிய மற்றும் புத்த மதங்களை ஏற்றுக்கொள்பவர்கள் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட […]