ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து குப்கர் அறிக்கைக்கான கூட்டமைப்பை அண்மையில் உருவாக்கியது. இக்கூட்ட அமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.அதே போல் துணைத்தலைவராக மெகபூபா முப்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய பரூக் அப்துல்லா குப்கர் கூட்டமைப்பு தேசத்துக்கு எதிரானது அல்ல.அது பாஜகவுக்கு எதிரானது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெறுவதே இக்கூட்டமைப்பின் நோக்கம் […]
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி நடைபெற்ற இந்திய,சீனவீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம். சீன தரப்பில் ஏற்பட்ட உயிழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக சீனா அறிவிக்கவில்லை. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. மோதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் காரணமாக பதட்டம் தணிந்து வருகிறது. சமீபத்தில், சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர் இட், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய […]
ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ரபேல் விவகாரத்தில் நீதிமன்றமே காவலாளியே திருடன் என்று கூறியதாக கூறி பிரதமர் மோடியை விமர்சித்தார் ராகுல் காந்தி.இதனால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ரபேல் தீர்ப்பு உண்மைக்கும், நேர்மையாக […]
சர்ச்சை கருத்தை கூறிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது கருத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் – ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக குறைந்தது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்தது.இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.அப்பொழுது அவர் கூறுகையில், அக்டோபர் 2-ஆம் தேதி வெளியான 3 திரைப்படங்களுக்கும் சேர்த்து அன்றைய தினம் 120 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர் .இது நாட்டின் பொருளாதாரம் […]
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது.இந்த தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து பாஜக தேசியதலைவர் அமித்ஷா,மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்,திமுகவின் கனிமொழி ஆகியோர் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.