கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி- யான, ரவீந்திரநாத் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தனது சொந்த தொகுதி நிதியில் இருந்து ரூ.1 கோடியை ஒதுக்கியுள்ளார்.