மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பேசியதாவது: சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் செய்வதற்கு வசதியாக, சோதனை முறையில் செல்போன் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் 780 வீடியோ புகார்கள் பெறப்பட்டன. இந்த வீடியோக்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பது குறித்து விரிவான […]