மக்களவையில் மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா எழுத்துப்பூர்வ தகவல் தெரிவித்தார்.அவர் அளித்த தகவலில், தமிழகத்தில் 13 நகரங்களில் வைகை, காவிரி உள்ளிட்ட 6 முக்கியமான ஆறுகளை சுத்தம் செய்யவும் நீர் மாசுபாட்டை குறைக்கவும் ரூ.905.78 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கான ரூ.623.65 கோடி தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.