பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் கைகளில் எலிகளோடு சட்டப்பேரவைக்கு வந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் ராப்ரி தேவி, முக்கியமான ஆவணங்கள் மற்றும் மருந்துகளை எலிகள் தின்று விடுவதாக அம்மாநில அரசு அவ்வப்போது குற்றசாட்டுவதாக கூறியுள்ளார். இதனால் எந்தவொரு பொருளும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியவில்லை என்றும் இதுபோன்று நடந்து வருவதால் எலிகளை பிடித்து கொண்டுவந்துள்ளதாக ராப்ரி தேவி குறிப்பிட்டார்.