சென்னை : மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், புதியதாக குடும்ப அட்டை விண்ணப்பித்த இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு புதிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்றைய தினம், […]
சேலம் : தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு குறிப்பிட்ட ரேஷன் கார்டுகள் பொறுத்து அரிசி (இலவசமாக), சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் ஒருசில இடங்களில் சுகாதாரமில்லாமல், எடை குறைவாக விநியோகிக்கபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு தற்போது புதிய முயற்சியை கையாண்டுள்ளது. அதன்படி, ரேஷன் பொருட்களை எடைபோட்டு அதனை பாக்கெட்டுகளில் அடைத்து […]
சென்னை : கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், சில ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மே மாதம் பருப்பு, […]
சென்னை : மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியதாக உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பணிக்காக கடந்த ஆண்டு ஜூலை முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, அரசு வழங்கி வரும் உதவித் தொகை, பேரிடர் கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு குடும்ப அட்டை அவசியமாகும். இந்நிலையில், ரேஷன் அட்டை கோரி […]
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சனை எழுந்தாலும், பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், QR-ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்தும், ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் தொடரும் நிலையில், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் […]
பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. “தர்பார் மகிளா ஒருங்கிணைப்புக் குழு” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கொரோனா ஊரடங்கினால் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது கடந்த ஆண்டு செப்டம்பர் 29 அன்று அடையாளச் சான்று கேட்காமல் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் வழங்க […]
மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவைகளின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையானது – காகிதமற்ற நிர்வாகத்தை அடையவும்,அனைத்து அரசுத் துறைகளாலும் டிஜிலாக்கர் அமைப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில்,இனி மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: […]
அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தை வழங்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வருமானத்தின் அடிப்படையில் ரேசன் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து “அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும்” முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல்: “நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும்”; […]
பொங்கலை சிறப்பாக கொண்டாட ரேசன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கு பச்சரிசி,முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க […]
ரேசன் அட்டைதாரர்கள் உணவுப்பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேசன் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி உணவு பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, கைவிரல் ரேகை சரிபார்த்து அதனடிப்படையில் இன்றியமையாப் உணவுப்பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளும் போது கைவிரல்கள் ரேகைகள் தெளிவில்லாமல் இருந்தாலோ அல்லது பயோமெட்ரிக்தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவோ இருந்தாலும் உரிய ஆவணங்களை சரிபார்த்து,உண்மையான அட்டைதார்களுக்கு உணவுப்பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே அநேக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது […]
புதுச்சேரியில் ரேசன் அட்டைகளுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வராக ரங்கசாமி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பின் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அமைச்சரவை சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்குதல் மற்றும் […]
குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி அதனை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது: “குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும்.அப்பொருட்களின் […]
உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது வினியோகத் திட்டத்தில் தற்போது 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் […]
குடும்ப அட்டை இருந்தால் போது கூட்டுறவு வங்கிகளில் எளிமையாக கடை பெறலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ரேஷன் கார்டு இருந்தால் போதும் கூட்டுறவு வங்கிகளில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ரூ.50,000 பெற்று கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாடக்குளம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். மேலும், முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதிகள் பெற எளிமையாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, ஊரடங்கு உத்தரவுக்கு […]
கொரோனா வைரஸ் அனைத்து நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காமல் மிரட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது அறிவித்தார். இதையெடுத்து தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு […]
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நாடு முழுவது ஜனவரி 15-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு. முதல் கட்டமாக 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டத்தை வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மத்திய […]
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், சுமார் 10 லட்சம் குடும்பத்தினர் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்துள்ளனர். இவர்களுக்கு அரிசி வழங்கப்படுவதில்லை. இவர்களுக்கு மேலும் சில நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்ததால், சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. இதன் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டு கடந்த 19ஆம் தேதி முதல், இன்று (26-11-2019) வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் தற்போது வரை 1 லட்சம் […]