பிரபல சைவ உணவகம் ஒன்றிலிருந்து வாங்கப்பட்ட பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாஜி பவன் என்ற சைவ உணவகத்தில் துக்க நிகழ்வுக்காக ஆர்டர் செய்யப்பட்ட சாப்பாட்டில் எலியின் தலை இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உணவு ஆர்டெர் செய்த முரளி என்பவர் கூறுகையில், ஹோட்டலில் இருந்து அனுப்பப்பட்ட உணவை 30க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில், பீட்ரூட் […]