ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 790 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 22,589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 790 பேர் ஒரே நாளில் […]
பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவு பேரிழப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஷ்ய நாட்டில் தமிழ் அறிஞராக இருந்த பேராசிரியர் அலெக்சாண்டர் அவர்கள் கொரோனாவால் இன்று மரணம் அடைந்தார். 1941 இல் பிறந்த இவர் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரண்டிலும் புலமை பெற்று சரளமாக தமிழ் பேசக் கூடியவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ரஷ்யாவில் 10 பல்கலைகழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வந்த […]
ரஷ்யாவில் 400 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போட்டியில் கலந்துகொண்டவரின் முழங்கால் சவ்வு கிழிந்தது. ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் செடிக் என்ற பளு தூக்கும் வீரர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் 400 கிலோ எடை கொண்ட பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர் 400 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போது முழங்கால் எலும்பில் உடைவு ஏற்பட்டதால், அலெக்சாண்டர் வலியில் துடிதுடித்து அழுதுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு குவாட்ரைசெப் எனும் தசைகள் கிழிந்துள்ளதாகவும், […]
கொரோனா வைரஸ் யாரையும் விட்டு வைக்காத நிலையில், தற்பொழுது ரஷ்யாவின் புதிய பிரதமருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் சில நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் எல்லாம் தனது கோர முகத்தை காண்பித்துக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் ரஷ்யாவிலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ரஷியாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாக்கியதை தொடர்ந்து, 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்று […]
உலக நாடுகள் எங்கிலும் கொரோனா அச்சத்தால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அணைத்து நாடுகளிலும் கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல், வெறிசோடி காணப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவில் யாசான் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதானால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் அடைந்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு, 32 வயது மதிக்கத்தக்க ஒருவர், அவர் ஜன்னலுக்கு வெளியே ஆண்களும், பெண்களுமாக கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். […]
ஏற்கனவே உலகெங்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல ஆயிரக்கணக்காக உயிர்கள் மடிந்து வரும் நிலையில், அண்மையில் ரஷ்யாவில் உள்ள குறில் தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டது. அங்கு நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவாக பதிவாகியது. ஆனால், அது குறித்த சரியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், இதன் தாக்கமாக அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கும் தற்போது சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவின் தலைநகர் மாஸ்க்கோவில், ஒரு குடியிருப்பு நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த குடியிருப்பில் இருந்த துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், நாளுக்குநாள் ஈக்களின் தொல்லையும் அதிகமாகியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை திறந்துள்ளனர். திறந்து பார்த்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி என்னவென்றால், அந்த வீட்டிற்குள் ஆண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அந்த ஆண் அலெக்சாண்டர் […]