ரஃபேல் போர் விமான தொடர்பான விவரங்களை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிர்மலா சீதாராமன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இந்தியாவிடம் முதல் ரஃபேல் போர்விமானம் 2019-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பான முழுமையான விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சகம் விரைவில் தாக்கல் செய்யும். சிஏஜி அறிக்கை 2019-2020 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்டதுக்கு முன்பே முடிக்கப்பட்டதால், […]
பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது. இந்த போர்விமானம், விஜயதசமி மற்றும் விமானப்படை நாளான இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல் முதலாக பெற்ற ரபேல் விமானத்தில் ஒரு ரவுண்டு பறந்து வந்தார்.
ரபேல் ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விசாரணையை துவங்கியதால் சிபிஐ தலைவர் பதவியில் இருந்து மத்திய அரசு அலோக் வர்மாவை நீக்கியதாக குற்றம் சாட்டினார்.இந்நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் அவரை சிபிஐ தலைவராக நியமித்துள்ளது நிம்மதி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரபேல் விவகாரத்தில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்றும் […]