தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு. 2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்.பி.பி.எஸ், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. […]
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு,அரசு மருத்துவ கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் 4349 இடங்கள் உள்ளன.மேலும்,சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்நிலையில்,தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.அதன்படி,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் […]
பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் தமிழகத்தில் இன்று வெளியீடப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பிறகு தற்பொழுது இன்று மாலை தரவரிசைப்பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்கொரோனாவால் சான்றிதழ் பதிவு ஏற்றம் செய்ய மாணவர்கள் கால அவகாசம் கேட்டு வந்ததால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 458 […]
பி.இ. மற்றும் பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ஆம் தேதி வெளியீடு. தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக, கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்து, அதற்கான ரேண்டம் எண் கடந்த மாதம் 26-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து, 17-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில மாணவர்கள் சரியாக சான்றிதழ் பதிவேற்றம் […]