ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பது தொடர்பாக வெளியான ஆடியோ விவகாரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், சச்சின் பைலட் ,முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லியில் முகாமிட்டு இருந்தார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் […]