கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக விரோதிகளால் நடந்துள்ள கலவரம், கோழைத்தனமான ஈன செயல் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மண்மலை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பம் மேடையில் அமைக்கப்பட்டிருந்த அக்னி கலசத்தையும் சிங்கம் சிலையையும் சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மேடையில் இருந்த அக்னி கலசத்தையும் சிலையையும் சேதப்படுத்திய சமூக விரோதிகளின் கோழைத்தனமான […]