டெல்லி : மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்படியாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் திட்டத்தை செயல்படுத்த ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது . இதற்கான சாத்திய கூறுகள் மற்றும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு சில மாதங்களுக்கு […]
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போது சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும்படியாக “ஒரே நாடு ஒரே தேர்தல் ” எனும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவானது ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது . அதே போல அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. […]
புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதிவேற்றதை தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த், அரசு மாளிகையில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பினார். இந்தியாவின் புதிய 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டு, இன்று அவர் முறைப்படி குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் இனி குடியரசு தலைவர் மாளிகையில் அதிகாரபூர்வமாக தங்கவைக்கப்படுவார். அதே போல, முந்தைய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், தனது, உடமைகளுடன் மாளிகையை காலி செய்துவிட்டார். ராம் நாத் […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப்பயணமாக உத்தர பிரதேசத்திற்கு சென்றடைந்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்றும், நாளையும் உத்தர பிரதேசம் செல்ல உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கான்பூர் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். அவரை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றுள்ளனர். சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார். குஜராத் முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக இன்று பூபேந்திர படேல் டெல்லி டென்றுள்ளார். அங்கு, அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். […]
கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள், கொரோனா பாதிப்பால் கடந்த 18 மாதங்களாக நாட்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயற்சி செய்வதாகவும், அது மட்டுமல்லாமல் இந்த கொரோனா […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று தர பிரதேச மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று 4 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேசம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தான் குடியரசுத் தலைவர் உத்திரபிரதேசம் செல்கிறார். ஜென்மாஸ்டமியை முன்னிட்டு வருகிற 29-ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு நடத்துகிறாராம். […]
டெல்லியில் இருந்து 5 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்தார். இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார். இதனால், ஜனாதிபதி டெல்லியில் இருந்து 5 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார். இந்நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு ஜனாதிபதி வந்தடைந்தார். விமானநிலையத்தில் ஆளுநர் […]
குடும்பத்தினர் ஏழு பேரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்றுள்ள ஷப்னம் என்பவரின் மகன், தனது தாயாரின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் அம்ரோகா எனும் நகரை சேர்ந்த ஷப்னம் எனும் பெண்மணி அவரது கள்ளக்காதலன் சலீம் என்பவருடன் சேர்ந்து தனது தந்தை, தாய், அண்ணன் குழந்தை உட்பட ஏழு பேருக்கு விஷம் கொடுத்து துடிக்கத் துடிக்க கோடாரியால் வெட்டி கொலை செய்த நிலையில், […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மனைவி சவீதா கோவிந்த் கொரோனா தடுப்புக்காக முகக்கவசங்களை தைத்து ஆதரவற்றோர் முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு கொடுத்தனுப்பியுள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பலர் வீட்டிலேயே முகக்கவசம் தயாரித்து அணிந்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் […]
இந்தியாவில் கொரோனா பரவலை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியா பல்வேறு விதமாக பொருளாதாரத்தில் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளுக்காக விருப்பம் உள்ளவர்கள் நிதியுதவி தரலாம் என கூறினார். இதையடுத்து பல அரசியல் காட்சிகள், திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என அவர்களால் முடிந்ததை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் […]
இந்தியா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா எனும் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால், அங்கு கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டத்திற்கு செல்ல முடியவில்லை. அதனால், தோனியின் சொந்த ஊரான ராஞ்சி சென்றுள்ளார். அங்கு ராஜ்பவனில் தங்கியுள்ளார். இதனை அறிந்த தோனி ராஜ்பவனில் உள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சென்று பார்த்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து எந்தவித தகவலும் […]
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அவரது வருகையை சுமார் 2,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தரிசனத்திற்க்கான நேரமும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. 40 வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் நடைபெரும். இதற்க்கு முன்னர் கடந்த 1979 ம் ஆண்டு அத்திவரதர் தரிசனம் நடைபெற்றது. அதன் பின் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த தரிசனத்திற்கு நாள் தோறும் லட்சக்கணக்கானோர் […]
காந்தி சமாதியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு,பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு,பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.இன்று தியாகிகள் தினமும் அனுசரிக்கப்படுவதால், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தலைமையில் ராணுவ வீரர்கள் காந்தியடிகளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை […]