ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலையில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த சசிகலா. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதனிடையே பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறினார். ஆனால், காலசூழ்நிலை மற்றும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று சசிகலா நாகையில் 3 மும்மத […]